
“டிச்சுக்குலுவி,டிச்சுக்குலுவி!”
கைதட்டி சிரித்துக்கொண்டிருந்த
சின்னதின் குதூகலம் தொற்றி
புதுப்பெயரோடு பறக்கத் தொடங்கியது
சிட்டுக்குருவி
மன்னிக்கவும்,
டிச்சுக்குலுவி.
“டண்தியா வா வா!”
வாய் நிறைய அழைத்து
ரெட்டைபின்னலை தடவிக்கொடுத்து
ஆசிர்வதித்து பத்துரூபாய் கொடுத்து
பூவைத்து திருஷ்டி கழித்த பாட்டியின்
ஒளியடைத்த கண்களிலும்
பற்களிழந்த உதட்டிலும்
அம்மை பதித்த கன்னத்திலும்
வடிந்து கொண்டிருந்தது
அவள் தொலைத்த பால்யம்.
பார்த்த முதல் தருணம் கவிதை என்றாய்.
பேசிப் பழகியதும் வாழ்க்கை என்றாய்.
நாள் குறித்த அன்றுதான் சொர்க்கமென்றாய்.
கயிறிறுக்கிய சில நாட்களில்
சேமித்து கொண்டாய் கைபேசியில்
“டார்ச்சர்” என்று.
எனக்கு மட்டுமேயான ஒரு உண்மையான பெயர்
கிடைத்த சந்தோஷத்தில்
உனக்கான பெயர் யோசிக்கிறேன்.


No comments:
Post a Comment