Saturday, March 19, 2011

ஒண்டிக்கு ஒண்டி! - Mission Impossible


“என்ன இங்க சண்ட? என்ன இங்க சண்ட?”

“வந்து இந்த ஒண்டிக்கு ஒண்டி,சாரி ஒன் டூ ஒன் மீட்டிங் எப்ப வச்சுக்கலாம்?”

“மார்னிங் எனக்கு ஆன்சைட்டோட மீட்டிங் இருக்கு,ஆஃப்டர்நூன் டிஸ்கஷன் வித் க்ளெயிண்ட்,ஈவினிங் விசி யோட பிசி, பட் இருந்தாலும் பரவாயில்ல உங்களுக்காக நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்,அரசியல்வாதிகள்னாலே தியாகிகள்தான”


“ஸ்டார்ட் மீசிக்!!!”
“உங்க மனசுல இருக்கறத எல்லாத்தயும் கொட்டுங்க”

“அது ஏன் சார் எனக்கு இந்த ரேட்டிங் குடுத்தீங்க”

“அதாகப்பட்டது வாழ்க்கைய எடுத்துகிட்டீங்கன்னா எல்லாமே ரெண்டு ரெண்டாத்தான் இருக்கும்,இன்பம் துன்பம்,நல்லது,கெட்டது,வாழ்க்கையோட அடியை கொஞ்சம் நோண்டிப்பாத்திங்கன்னா”

“அதான் சார் நானும் கேக்குறேன்,இரும்பு பக்கெட் குடுத்துருக்கலாம் இல்ல பிளாஸ்டிக் பக்கெட்கூட குடுத்துருக்கலாம்,அது ஏன் சார் ரெண்டுமில்லாம குப்ப பக்கெட் குடுத்தீங்க”

“எல்லாருக்கும் இரும்பு பக்கெட்டே குடுத்தா கம்பெனிக்கு கட்டுபடி ஆகுமா சொல்லுங்க,இரும்பு பக்கெட் கேக்குற அளவுக்கு நீங்க என்ன செஞ்சீங்க”

“அய்ய்..நீங்கதான போன தடவ ரிலீஸ் கேட்டா மட்டும் க்ரிட்டிகல் ரிசோர்ஸ்ன்னீங்க”

“அது போன மாசம்”


“இந்த பக்கெட்டால ஒன்னும் நஷ்டமில்ல,அடுத்த தடவ இத விட பெரிய பக்கெட்டா குடுத்து அசத்திர்ரோம்”

“நஷ்டமில்லயா,இந்த இன்செண்டிவ்,சம்பளப்பணம் எல்லாத்தயும் நீங்களா குடுப்பீங்க”

“அட வெவரமில்லாம பேசுறீங்களே,இன்செண்டிவ் அதிகமா கெடச்சா அப்டியே விட்டுருவோமா?அப்டியே ட்ரீட்னு கூட்டிட்டு போய் மொட்ட அடிச்சிர மாட்டோம்,அடுத்தவன் காசுல சாப்டுறமேன்னு சந்தோசப்படுங்கப்பூ”
“நீங்க விசிபிலிட்டியே இன்னும் கிரியேட் பண்ணல,அதான் தப்பு”

“இவ்ளோ பெருசா நீங்க என் முன்னால நின்னா நான் எப்புடி தெரிவேன்?”

“ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்ல(ஹப்பா வந்த அவமானத்த திசை திருப்பிட்டோம்ல)”

“ஆரு சொன்னா என்ன யாருக்கும் தெரியாதுன்னு,எனக்கு எத்தன ப்ளாக்கர்ஸ தெரியும் தெரியுமா?”

“ஆங்ங்ங் நல்லவேள ஞாபகப்படுத்துனிங்க,ஏன் நீங்க வேல செய்ய வேண்டிய நேரத்துல ப்ளாக் போடுறீங்க”

“வேல செய்ய வேண்டிய நேரத்துலயா,நான் வீட்டுக்கு போயிதான எழுதறேன்?”

“ஏன் வீட்டுக்குப் போயி வேல செய்யக்கூடாதுன்னு யாரு சொன்னா?”
நீங்க ஏன் டீச்சர் வெளாட்டு வெளாடி பாடம் நடத்த மாட்டேன்றீங்க”

“அட மறந்துட்டீங்களா நீங்ககூட நான் எடுத்த கிளாஸ்ல முன்வரிசைல உக்காந்து தலயாட்டி இரசிச்சீங்களே”

“அதுவந்து ஏசி நல்லார்ந்துதா தூங்கிட்டேன்பா”


“தப்பு உன்மேலதான்,அன்னிக்கு நீ performance fine tuning in sql combined with tomato rice and thakkali soup கிளியராவே எடுக்கல”

“அப்டின்னா”,தலையை சொறிந்துகொண்டே.

“பாத்தியா உன்னோட grasping power கம்மியாத்தானிருக்கு”

:cry:

“டார்கெட் ஆடியன்ஸ ரோலாப்பா மோலாப்பா டோல்டப்பானுகூட நீ கேள்வி கேக்கல”

மீண்டும் தலையை சொறிந்துகொண்டே, “இதென்ன புதுசா இருக்கு!”

“objectiveகூட தெரியாம கோர்ஸ் எடுத்திருக்கீங்க”

“இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க?”

“கூட வெச்சிருக்கவங்களுக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் கொடுக்கறதில்ல”


பிகு: இது புண்பட்ட மனத்தை போஸ்ட் போட்டு ஆற்றும் முயற்சி.யாரையும் காயப்படுத்துவதற்கல்ல.இதில் எந்த உள்குத்தோ உளவியல் சிக்கலோ இல்லை.சொந்த கதையா என்றெல்லாம் கமென்ட் போடுபவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.

No comments:

Post a Comment