Wednesday, May 11, 2011

என்னம்மா தோழி…

ஆடிமாதம் கன்னிக்கோவில் திருவிழாவில்
அழுது அடம்பிடித்து வாங்கிய
பஞ்சு முடி வைத்த பிளாஸ்டிக் பொம்மை
எல்லாரையும்விட நெருக்கமாகிவிட்டது.
எனக்கு வாங்கிய பட்டுப்பாவாடையின் பாதிச்சரிகை
என் குட்டி பொம்மைக்கு புடவையானது.
எனக்கு கவளம் அம்மாவூட்ட
என் பொம்மைக்கு பருக்கை நானூட்ட
அம்மா வந்து பெருக்கும்வரை
தரையெல்லாம் சிந்திக்கிடந்தது சந்தோஷம்.
எங்களிருவரையும் பார்த்த எல்லோரும்
ஒன்று போலிருப்பதாய்
கைகளை நெட்டிமுறித்து
திருஷ்டி கழித்தார்கள்.
அடுத்த திருவிழா ஆரம்பிக்கும்போதுதான்
என் பொம்மைக்கு உடம்பு கெடத்தொடங்கியது.
மழைக்கு நைந்த தலைமுடி கிழிந்து
வட்டநிலா மொட்டையாய் மிஞ்சியது.
தலையாட்டும்போது கொட்டும் இமைகள்
உண்மையிலேயே கொட்டிப்போய் மூளியாய்.
மார்கழி கோலத்தில் தவறவிட்டதில்
உடலெங்கும் பொருத்தமில்லா
வண்ணத் தேமல்கள்.
ஒன்னாம் வருட பிறந்தநாளுக்கு முன்னரே
எல்லாம் தேய்ந்து போனதென் பொம்மை.
அம்மா திட்டினாள் வீட்டுக்கு ஆகாத சூனியமென்று.
இயலாமையோடு தந்த அடிகளுக்குப் பின்னர்
கண்ணீரை உள்ளே இழுத்துக்கொண்டு
உதட்டை கடித்து ஒளித்து வைக்கிறேன்
கையைவிட்டு இறக்காமல் பார்த்துக்கொள்கிறேன்
என் சுயத்தின் மிச்சமென எதிர்க்கத் தெரியாமல்.
இப்போதும் பார்ப்பவர்கள் சொன்னார்கள்
தூக்கி எறியச்சொல்லி.
விட்டகுறை தொட்டகுறையென
எத்தனைமுறை என்னையே
நான் தூக்கியெறிவது?

Sunday, April 24, 2011

இது முன்பனிக்காலம்! (6)

அவன் எழுந்து எனக்கடுத்திருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான்.முதல் வகுப்பிலிருந்த பயணிகள் எங்களையே வெறித்துக்கொண்டிருந்தனர்.முதல் வகுப்பு பயணிகள் என்பதால் எந்த எதிர்ப்போ விமர்சனமோ இன்றி பார்த்துக்கொண்டிருந்தனர்.இதுவே இரண்டாம் வகுப்பாயிருந்தால் எங்கள் பிரச்சினைக்கு பெரிய கவரேஜ் கிடைத்திருக்கும்.நல்லவேளை!அந்த சிறிய கவனம் பெறுதலே மூவருக்கும் அசௌகரியமாக இருந்தது.
முந்தைய சந்திப்பைப்போல இந்த சந்திப்பிலும் நாங்கள் அமைதியாகத்தான் இருந்தோம்.திடீரென எனக்கு அந்த முகபுத்தக திருமணநிலை பகிர்வும்,அதை பின்தொடர்ந்த அந்த இரவும் நினைவுக்கு வந்தது.அவனோடு அமர பிடிக்கவில்லை,அவனை பார்க்கவும்.அடுத்த நிறுத்தத்தில் ரயில் நின்றது.அந்த ஆளில்லாத நிலையத்தில் ரயில் அரை நிமிடம்கூட காத்திருக்காது.கார்ட் வந்து பச்சைக்கொடி காண்பிக்கும் நேரம் சட்டென்று இறங்கிவிட்டேன் நான் இறங்கவேண்டிய நிறுத்தத்திற்கு வெகுமுன்பாகவே.ரயில் நகரத் தொடங்கியது. சற்றும் எதிர்பாராமல் திடுக்கிட்ட இளாவிடம் “நான் இன்னிக்கு லேட்டா வர்றேன்,நீ போ”,என்று கத்திவிட்டு கை காண்பித்தேன்.நான் எதிர்பார்க்காத வகையில்(ஒரு வேளை எதிர்பார்த்திருந்தேனோ!) அவனும் ரயிலிலிருந்து சட்டென்று குதித்தான்.இப்போது ரயில் எங்கள் இருவருக்கும் டாட்டா காண்பித்துவிட்டு சென்றுவிட்டது.
ச்சே,ரயிலிலிருந்து தனியா குதிக்கக் கூட எனக்கு ரைட்ஸ் இல்லையா? நான் அவனை வெளுவெளுவென வெளுக்கும் வெறுப்பில் இருந்தேன்
“நீங்க எதுக்கு இப்ப எறங்கினீங்க?”
“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் சீதா”
“என்ன ஏன் பிடிக்கலன்னு ரீசன் சொல்றதுக்கா?”
“உங்க ஃபிரெண்ட் மாதிரியே நீங்களும் எகிறாதீங்க,உங்களுக்காகத்தான் அவங்கள சும்மா விட்டேன்”
 “அவ என் ஃப்ரெண்டுங்க,எனக்காக யோசிக்கிறவ,அப்டித்தான் பேசுவா,அவ கேட்ட ஒரு கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியுமா,அவள பத்தி பேசறதெல்லாம் வச்சிக்காதீங்க,எல்லாம் எங்க அப்பாம்மாவ சொல்லனும்”
“உங்கப்பாம்மாகிட்டயும் சொன்னேங்க,அவங்கதான் முடியாதுன்னு சொன்னாங்க”
“ஹலோ இதென்ன புது கத கெளப்பி விடுறீங்க?”
“தயவு செஞ்சி ஒரு அஞ்சு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க”,என கையை ஒரு நட்சத்திர உணவு விடுதியின் சேவகன் பதிவு செய்திருந்த இருக்கையில் அமர காட்டுவதுபோல சில்லென்ற இரும்பு பெஞ்சு ஒன்றை காட்டி கெஞ்சினான்.நான் போனால் போகட்டுமென்று அமர்ந்து கேட்க ,அவன் சொல்லத்தொடங்கினான் நான் அறியாததை.
அவன் எல்லோரையும் போல் இருக்க விரும்பவில்லையென்று.அவனுக்கு உறுப்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்று அரிப்பு இருந்ததை.அதற்காக பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ஒரு பள்ளி ஆரம்பித்ததை.ஆனால் குறைந்த கட்டணத்தோடு மிகப்பெரிய கட்டிட வசதியின்றி சாதாரணமாய் இருந்த பள்ளி மக்களுக்கு பிடிக்கவில்லை.லாபம் இல்லையென்றாலும் பரவாயில்லை,கடன் கட்டித்தான் தொடர்ந்து நடத்தும் சூழ்நிலை வரவும் பள்ளிவேலைகளை நிறுத்திவிட்டு வேலை செய்ய ஆரம்பித்து இப்போது கொஞ்சம் கடன் அடையத்தொடங்கி  இருக்கிறது.அவனுக்கு பிரத்யேகமாக கல்யாணத்திலோ,மென்பொருள் வேலையிலோ விருப்பமில்லை.என்னைப்போலவே பெற்றோரின் தொனதொனப்பு தாங்காமல் பார்க்க வந்தானாம்.ஆனால் கடன் இன்னும் சில லட்சங்களில் பாக்கி இருப்பதும்,அந்த பள்ளியை சரிப்படுத்த வேண்டிய கட்டாயமும் துரத்த கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம்.
“கண்டிப்பா நான் இதே வேலையில இருக்க மாட்டேன்,என்னோட ஆசை என்னோட மனசுல இருக்கற மாதிரியே ஒரு மாடல் ஸ்கூல என் கைக்காசுக்கு அடி விழாம உருவாக்கறதுதான்,இன்னொருத்தங்கள அதுக்கு நான் கட்டாயப்படுத்தவோ ஏமாத்தவோ கூடாதுல்ல,அதான் கல்யாணம் வேணான்னுட்டேன்”
‘கடன அடச்சிட்டு கல்யாணம் பண்ண யோசிச்சிருக்கலாமே’,என கேட்க நினைத்தாலும் அது என்னைப் பற்றி யோசித்திருக்கலாமே என நானே கேட்பதைப்போல் இருக்கும் என்பதால் அமைதியாக இருந்தேன்.
 “ஆனா எங்க அப்பாம்மாவால அப்டி இருக்க முடியல,உங்கள பாத்ததுக்கு அப்றம் எனக்கு தோனுனத உங்கப்பாம்மாகிட்ட சொன்னேன்,ஆனா அவங்க அத ஒத்துக்கல”
“எத ஒத்துக்கல?”
“ஒரு வருஷத்துக்கப்புறம் கடன அடச்சிட்டு கல்யாணத்த வச்சுக்கலாமேன்னு அப்பா உங்க வீட்டுல கேட்டாங்க,ஆனா அவங்க முடியாதுன்னிட்டாங்க”
இவன் எப்படி நான் யோசிப்பதையெல்லாம் சொல்கிறான்.என் முகம் அவ்வளவு துல்லியமாகவா உணர்வுகளை படம் போடுகிறது?இல்லை மேஜிக்கல் சயின்ஸ் ஸ்டூடண்டா?
So you mean?
"yes,எனக்கு உங்கள பிடிச்சிருந்தது,ஆனா நெறய யோசிக்க வேண்டி இருந்தது"
“நீங்க சொல்றதெல்லாம் உண்மையா?எங்க வீட்ல சொல்லவேயில்ல”
“அதுசரி,எந்த வீட்டுல சொல்வாங்க?உங்க நம்பர் கேட்டேன்,சாரி சொல்றதுக்கு,திட்டிவிட்டுட்டாங்க!”,என்றான் ஒரு ஸ்மைலியைப்போல் சோகமாக. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அவன் தவறுமில்லை ஆனால் அதற்கு வேறு யாரும் பொறுப்பேற்கவும் முடியாத நிலை.
எனக்கப்போதுதான் கொஞ்சம் சுரீரென்று உறைத்தது.
“அம் ரியலி சாரி,இதுல இவ்வளவு விஷயம் இருக்கும்போது,நானும் இளாவும் உங்கள திட்டிட்டோம்,யு ஆர் ரியலி டிஃப்ரெண்ட்!”
அதே பழைய சிரிப்பை இப்பொதும் மென்மையாய் முகத்தில் படர விட்டான்.அடுத்த ரயில் வருவது தெரிந்தது.இப்போது கிளம்பினால் சரியாக மதிய உணவுக்கு அலுவலகம் செல்ல நேரிடும்.பரவாயில்லை,இன்று மாலை அதிகப்படியாக இரண்டு மணிநேரம் உழைத்துக்கொள்ளலாம்.
 “உங்க நம்பர் குடுக்க முடியுமா,இஃப் யு ஆர் ஓகே?”
என் எண்ணைக்கொடுத்து அவன் எண்ணை வாங்கி  அவசர அவசரமாக  பண்டமாற்றி எச்சரிக்கையாக நான் பெண்கள் பெட்டியிலும் அவன் முதல் வகுப்பிலும் ஏறினோம்.முதலிலேயே பெண்கள் பெட்டியில் ஏறியிருந்தால் இன்று இந்த சம்பவம் நடந்திருக்காது.கடவுளுக்கு ஒரே நேரத்தில் நன்றியும் சாரியும் சொல்ல வேண்டுமெனத் தோன்றியது.முதல்வகுப்புப்பெட்டியிலிருந்து அவன் ஒருமுறை தொங்கியவாறு திரும்பிப்பார்த்தான்.நான் உள்ளே போய் மறைந்தேன்.
அவன் கதையை கேட்டதும் மனம் குழம்பத்தொடங்கியது.சரியாக அவன் என்னைப்பார்த்துவிட்டு போன ஒரு வாரத்திற்குப்பிறகு நான் என்ன செய்ய வேண்டுமென எனக்குப் புரிந்தது.இப்போதைக்கு திருமணத்திற்கு ஒரு இடைவெளியும் என் மனதிற்கேற்ற ஒரு மாற்றமும் தேவைப்பட்டது.சின்ன வயதிலிருந்தே சிவில் சர்வீசஸ் மீது ஈர்ப்பு உண்டெனக்கு.என்றாலும் படித்து முடித்தவுடன் வேலை,பிரச்சினையில்லாத வாழ்க்கை என எதை பற்றியும் யோசிக்காமல் இருந்தேன்.இவன் மறுத்ததும் எதையோ யாருக்கோ நிரூபிக்க எண்ணியே சிவில் சர்வீசஸ் தேர்வெழுத ஆசைப்பட்டேன்.அடுத்த வாரத்திலிருந்து வகுப்புகள் ஆரம்பம்.முதல்முறையாக வாழ்க்கையில் குழம்பாமல் ஒரு முடிவு எடுத்ததாக எண்ணினேன்.
இதென்ன இப்போது இவனது மறுநுழைவு?
ஏன் எப்போதும் எனக்கு இரவின் தெளிவைத்தந்துவிட்டு அதில் ஒரு குழந்தையின் கூச்சலையும் கொடுக்கிறார்கள்?ஆனால் நான் தெளிவாக இருக்கிறேன்.எனக்கு எந்த சலனமும் வேண்டாம்.அந்த எண்ணை அழித்துவிடப் போகிறேன்.
டெலிட்டில் கையை வைக்கும்போது அவனிடம் இருந்து ஒரு குறுந்தகவல்
“I am getting down.c u tomo.nice to c u.”
நாளைக்குமா?!இது எங்க போய் முடியுமோ!நான் அந்த எண்ணை அழித்தேனா என்று கேட்கும் அளவுக்கு சிறுகுழந்தையாக இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அன்று அலுவலகம் முடிந்து வந்ததும் மூன்று வாலுகளும் ஒன்றாக மாடிக்குப் போனோம்.இன்று எங்களுக்கு நிலாச்சோறு நாள்.மாதத்தின் முதல் திங்கள் நிலாச்சோறு நாள்,வார்டனுக்கு தெரியாமல்தான்.ஓட்டலில் வாங்கி வந்திருந்த சாப்பாட்டை உள்ளே அனுப்பிக்கொண்டே கதையை சொல்லி முடித்தேன்.
“பரவால்லப்பா நல்ல பையனாத்தான் தெரியறான்”-அச்சு.
“ஹ்ம்ம்ம் அப்ப அவனுக்கு வாழ்க்க கொடுத்திற வேண்டியதுதான்”-லவ்.
“அவன் என்ன நெனக்கிறானோ,யாருக்கு தெரியும்,நான் பாட்டுக்கு ஒழுங்கா சிவில் சர்வீசஸ் படிக்க போறேன்”-சீதாவாகிய நான்.
“போடி பாட்டி,நீ போய் சிவில் சர்வீசஸ் படிக்க போறியா,இந்து பேப்பர்கூட படிக்க மாட்ட”-லவ்
“ஹேய் லூசு...முக்கியமான விஷயம் அந்த அருந்ததி யாருன்னு கேட்டியா?”-இளா
ஆமா இல்ல,அந்த அருந்ததி யாரு???

Monday, April 18, 2011

ஜே.ஜே : சில குறிப்புகள் -சுந்தர ராமசாமி

ஜே ஜே: சில குறிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒரு புனைவு என்று சில இடங்களில் படித்திருக்கிறேன்.படிக்கத் தொடங்கியவுடன்,  
“வெளிவாசலை யாரோ பூட்டிவிட்டார்கள் என்பதை ஜே.ஜே கண்டுகொண்டான்.அதுவரையிலும் அவன் பயணம் தொடர்ந்திருந்தது.எருமைகளோ கழுத்துச் சங்கிலியுடன்,அவையே கழித்த சாணிமீது சரிந்து,உதிரி வைக்கோலை அரை மயக்கத்தில் அசைபோட்டுக்கொண்டு கிடக்கின்றன” 
என்னும் வரிகள் இவன் தான் ஜேஜே என கோடிட்டு காட்டுகின்றன.அதுமட்டுமல்ல ஜே.ஜே,அவன் ஒரு கேள்வியாளன்,சிந்தனைவாதி எல்லாவற்றையும்விட அதிகமாய் அவன் ஒரு ரசிகன்,கலைஞன்,தச்சன்,ஓவியன் அந்த நிமிடத்தை வாழ்பவன்,சில சமயம் அந்த நிமிடம் நகர்ந்த பின்னும் அதிலேயே வாழ்பவன்,அதைத்தாண்டியும் பார்க்கத் தெரிந்தவன்.மேற்சொன்ன வரிகளை எழுதிய சுபத்திரம்மா தங்கச்சியை பற்றி இக்கண்ட வாரியார் என்னும் விமர்சகர்  “அவள் பார்க்கப் பார்க்க பெண்போல் காட்சியளிக்கக்கூடியவள்”, என்று சொன்ன வார்த்தைகள்…இந்த வார்த்தைகளில் உங்களுக்கு அதிசயிக்க அப்படி ஏதாவது தெரிகிறதா?நான் திரும்ப திரும்ப இந்த வரிகளை வாசித்துக்கொண்டிருந்தேன்.எனக்குள் சுபத்திரம்மா தங்கச்சிக்கு ஒரு உருவம் எழத்தொடங்கியது.இத்தனைக்கும் அவர் பெயர் இன்னும் ஒரே இடத்தில் மட்டுமே வருகிறது.
ஜேஜே இறந்ததும் எழுத்தாளர் சிட்டுக்குருவி அவருக்கு அளிக்கும் அஞ்சலி தமிழ் எழுத்தாளனின் சாபக்கேட்டையும்,உள்ளொளிக்கு சற்றும் குறைவில்லாமல் ட்யுப்லைட் ஒளி பளீரென்று எரிவதையும் காட்டுகிறது.பாலு என்னுமிந்த எழுத்தாளன் எதற்காக தமிழல்லாத எழுத்தாளனொருவனை பற்றி இவ்வளவு மெனக்கெட்டு எழுத வேண்டும் என தோன்ற இடம் கொடுக்காமல் எழுத்தாளரே சொல்கிறார்,
“காஃப்கா என்கிறோம்,சிமோன் த பூவா என்கிறோம்,குட்டிக்கிருஷ்ண மாராரை தெரியாது என்கிறோம்,கோபாலகிருஷ்ண அடிகாவைத்தெரியாது என்கிறோம்,எப்படியிருக்கிறது கதை?”.நியாயம்தானே?
எதற்காக ஜே.ஜே அத்தனை எழுத்தாளர்களில்?ஜே.ஜேவுக்கும் பாலுவுக்கும் உள்ள உறவை துரோணருக்கும்,ஏகலைவனுக்கும் உள்ள உறவாகக்கூட காண முடியாது.இருவரில் ஒருவர் மட்டுமே இன்னொருவரை அதிகம் அறிந்திருக்கிறார்.பாலுவுக்கு ஜே.ஜேவை கண்டு கசியும் உணர்வு ப்ரியமா,ஆகர்ஷமா?தான் ஆக விரும்பியதை வேறொருவன் ரத்தமும் சதையுமாக ஆகியிருப்பதை கண்டு வெதும்பும் இயலாமையை, உணர்வடுக்குகள்மேல் ஜே.ஜே வீசும் எரிகுண்டுகளை பாலுவால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடிவதேல்லை.
ஜே.ஜே கலைமகள் கடாட்சம் பெற்றவன்.பாலு தன்வந்திரி பகவான் கடைக்கண் கொண்டு பார்க்க வேண்டியவன்.ஜே.ஜே எவருக்காகவும் அமிலத்தில் தண்ணீர் கலப்பதில்லை.பாலுவே சொல்வது போல் ‘உண்மை எதிர்மறையாக்கப் படுமானால் அதிக அழுத்தம் கொடுத்து சொல்பவன்’.அவனுக்கெதிரில் திருச்சூரும், முல்லைக்கல்லும் ஒன்றுதான்.தேனிலவின் போலி குளிர்ச்சிகூட அவனை ஏமாற்ற முடியாது.உம்மினிக்குட்டியைத்தான் சொல்கிறேன்!
எனக்கு ஒன்றுணர்வை தந்த பகுதி ரமணியும்,பாலுவும் மரப்பாச்சிக்கு வைத்தியம் பார்க்கும் இடம்.ரமணி சின்னக்குழந்தையைப்போல மரப்பாச்சியை பார்த்துக்கொள்வதும்,பாலு தன்னால் ரமணியைப்போல் பொம்மையுடன் பேச முடியவில்லையே என ஏங்குவதும் அழகு.நண்பனின் கனவை ஓவியமாக்குகிறான் ஜே.ஜே,இரண்டாம் முறை நண்பன் சம்பத்துக்கு அதே கனவு வந்ததும் ஓட்டமாய் விரைந்து முக்கியமான விஷயம் என்று சொல்லி உறங்கிக்கொண்டிருக்கும் ஜே.ஜேவை எழுப்பிச் சொல்கிறான், “ஜே.ஜே மறுபடியும் நான் அற்புதமான சூரியோதயத்தைக்கண்டேன்”.இப்படிப்பட்ட நட்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்கணும்.
நால்வரின் நினைவு மற்றும் எழுத்துத் தொகுப்புகள்தான் கதை. பாலு,அரவிந்தாட்ச மேனன்,சம்பத்,ஜே.ஜே.இதில் சம்பத்துடைய நாட்குறிப்பு கொஞ்சம் சுவாரஸ்யமின்றி போனதாய் உணர்ந்தேன்,மற்ற மூவருடன் ஓப்பிடுகையில்.அதேபோல் இன்னொரு பின்னூட்ட விமர்சனம் வலைத்தளத்தில்(நன்றி-பரம்ஸ்) ஜே.ஜே யாசகம் கேட்ட குஷ்டரோகிக்கு காசிட யோசிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் பற்றியது.ஒருவருடன் உரையாடலைத் துவக்க ஐந்து நிமிடம் யோசிக்கிறோம்,கடன் கேட்க சில மணி நேரங்கள் யோசிக்கிறோம்,பிச்சையிட பத்து நிமிடம் யோசிக்க முடியாதா என்ன?அது அவரவரது சிந்தனை இயங்கும் தளத்தையும்,வேகத்தையும் பொறுத்தது.
கடைசி கடைசியாய் பின்னுரையைப் படித்தபோது ஒரு சின்ன ஏமாற்றம்.நான் அத்தனை நெருக்கமாய் உணர்ந்த அரவிந்தாட்ச மேனன்,சுபத்திரம்மா தங்கச்சி,சாராம்மா இவர்கள் யாருமே உண்மையில்லையா?அதுவரை ஒரு கேரள எழுத்தாளனின் உறவுகள்,உணர்வுகள்,சிந்தனைகளின் வாழ்க்கை விளக்க நூல் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.எதுவும் தோன்றாமல் அரவிந்தாட்ச மேனன் பேனாவில் மை ஏற்றும் காட்சி தோன்றியது.புனைவென்றே தெரியாமல் ஒரு புனைவை படித்திருக்கிறேன்.நானென்ன பெரிய விஷயம், கேரள எழுத்தாளரொருவரே ஏமாந்திருக்கிறார்.வாசகருக்கு புதிய அனுபவமும்,விமர்சகனுக்கு கொஞ்சம் குழப்பமும் என பின்னுரையில் இப்புதினம் பற்றி படித்த ஞாபகம்.நான் விமர்சகியல்ல என்பதால் எனக்கு மிக நெருக்கமாகவும் ஈர்க்கக்கூடியதுமாக உணர்ந்தேன் ஜே.ஜேவை.
மொத்தத்தில் இக்கண்ட வாரியாரின் பாணியில் சொல்வதனால் “படிக்கப் படிக்க மாய உண்மையாய்த் தோன்றும் புனைவிது...”

Sunday, March 27, 2011

இது முன்பனிக்காலம்! (5)

அவன் எழுந்து எனக்கடுத்திருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான்.முதல் வகுப்பிலிருந்த பயணிகள் எங்களையே வெறித்துக்கொண்டிருந்தனர்.முதல் வகுப்பு பயணிகள் என்பதால் எந்த எதிர்ப்போ விமர்சனமோ இன்றி பார்த்துக்கொண்டிருந்தனர்.இதுவே இரண்டாம் வகுப்பாயிருந்தால் எங்கள் பிரச்சினைக்கு பெரிய கவரேஜ் கிடைத்திருக்கும்.நல்லவேளை!அந்த சிறிய கவனம் பெறுதலே மூவருக்கும் அசௌகரியமாக இருந்தது.
முந்தைய சந்திப்பைப்போல இந்த சந்திப்பிலும் நாங்கள் அமைதியாகத்தான் இருந்தோம்.திடீரென எனக்கு அந்த முகபுத்தக திருமணநிலை பகிர்வும்,அதை பின்தொடர்ந்த அந்த இரவும் நினைவுக்கு வந்தது.அவனோடு அமர பிடிக்கவில்லை,அவனை பார்க்கவும்.அடுத்த நிறுத்தத்தில் ரயில் நின்றது.அந்த ஆளில்லாத நிலையத்தில் ரயில் அரை நிமிடம்கூட காத்திருக்காது.கார்ட் வந்து பச்சைக்கொடி காண்பிக்கும் நேரம் சட்டென்று இறங்கிவிட்டேன் நான் இறங்கவேண்டிய நிறுத்தத்திற்கு வெகுமுன்பாகவே.ரயில் நகரத் தொடங்கியது. சற்றும் எதிர்பாராமல் திடுக்கிட்ட இளாவிடம் “நான் இன்னிக்கு லேட்டா வர்றேன்,நீ போ”,என்று கத்திவிட்டு கை காண்பித்தேன்.நான் எதிர்பார்க்காத வகையில்(ஒரு வேளை எதிர்பார்த்திருந்தேனோ!) அவனும் ரயிலிலிருந்து சட்டென்று குதித்தான்.இப்போது ரயில் எங்கள் இருவருக்கும் டாட்டா காண்பித்துவிட்டு சென்றுவிட்டது.
ச்சே,ரயிலிலிருந்து தனியா குதிக்கக் கூட எனக்கு ரைட்ஸ் இல்லையா? நான் அவனை வெளுவெளுவென வெளுக்கும் வெறுப்பில் இருந்தேன்
“நீங்க எதுக்கு இப்ப எறங்கினீங்க?”
“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் சீதா”
“என்ன ஏன் பிடிக்கலன்னு ரீசன் சொல்றதுக்கா?”
“உங்க ஃபிரெண்ட் மாதிரியே நீங்களும் எகிறாதீங்க,உங்களுக்காகத்தான் அவங்கள சும்மா விட்டேன்”
 “அவ என் ஃப்ரெண்டுங்க,எனக்காக யோசிக்கிறவ,அப்டித்தான் பேசுவா,அவ கேட்ட ஒரு கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியுமா,அவள பத்தி பேசறதெல்லாம் வச்சிக்காதீங்க,எல்லாம் எங்க அப்பாம்மாவ சொல்லனும்”
“உங்கப்பாம்மாகிட்டயும் சொன்னேங்க,அவங்கதான் முடியாதுன்னு சொன்னாங்க”
“ஹலோ இதென்ன புது கத கெளப்பி விடுறீங்க?”
“தயவு செஞ்சி ஒரு அஞ்சு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க”,என கையை ஒரு நட்சத்திர உணவு விடுதியின் சேவகன் பதிவு செய்திருந்த இருக்கையில் அமர காட்டுவதுபோல சில்லென்ற இரும்பு பெஞ்சு ஒன்றை காட்டி கெஞ்சினான்.நான் போனால் போகட்டுமென்று அமர்ந்து கேட்க ,அவன் சொல்லத்தொடங்கினான் நான் அறியாததை.
அவன் எல்லோரையும் போல் இருக்க விரும்பவில்லையென்று.அவனுக்கு உறுப்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்று அரிப்பு இருந்ததை.அதற்காக பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ஒரு பள்ளி ஆரம்பித்ததை.ஆனால் குறைந்த கட்டணத்தோடு மிகப்பெரிய கட்டிட வசதியின்றி சாதாரணமாய் இருந்த பள்ளி மக்களுக்கு பிடிக்கவில்லை.லாபம் இல்லையென்றாலும் பரவாயில்லை,கடன் கட்டித்தான் தொடர்ந்து நடத்தும் சூழ்நிலை வரவும் பள்ளிவேலைகளை நிறுத்திவிட்டு வேலை செய்ய ஆரம்பித்து இப்போது கொஞ்சம் கடன் அடையத்தொடங்கி  இருக்கிறது.அவனுக்கு பிரத்யேகமாக கல்யாணத்திலோ,மென்பொருள் வேலையிலோ விருப்பமில்லை.என்னைப்போலவே பெற்றோரின் தொனதொனப்பு தாங்காமல் பார்க்க வந்தானாம்.ஆனால் கடன் இன்னும் சில லட்சங்களில் பாக்கி இருப்பதும்,அந்த பள்ளியை சரிப்படுத்த வேண்டிய கட்டாயமும் துரத்த கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம்.
“கண்டிப்பா நான் இதே வேலையில இருக்க மாட்டேன்,என்னோட ஆசை என்னோட மனசுல இருக்கற மாதிரியே ஒரு மாடல் ஸ்கூல என் கைக்காசுக்கு அடி விழாம உருவாக்கறதுதான்,இன்னொருத்தங்கள அதுக்கு நான் கட்டாயப்படுத்தவோ ஏமாத்தவோ கூடாதுல்ல,அதான் கல்யாணம் வேணான்னுட்டேன்”
‘கடன அடச்சிட்டு கல்யாணம் பண்ண யோசிச்சிருக்கலாமே’,என கேட்க நினைத்தாலும் அது என்னைப் பற்றி யோசித்திருக்கலாமே என நானே கேட்பதைப்போல் இருக்கும் என்பதால் அமைதியாக இருந்தேன்.
 “ஆனா எங்க அப்பாம்மாவால அப்டி இருக்க முடியல,உங்கள பாத்ததுக்கு அப்றம் எனக்கு தோனுனத உங்கப்பாம்மாகிட்ட சொன்னேன்,ஆனா அவங்க அத ஒத்துக்கல”
“எத ஒத்துக்கல?”
“ஒரு வருஷத்துக்கப்புறம் கடன அடச்சிட்டு கல்யாணத்த வச்சுக்கலாமேன்னு அப்பா உங்க வீட்டுல கேட்டாங்க,ஆனா அவங்க முடியாதுன்னிட்டாங்க”
இவன் எப்படி நான் யோசிப்பதையெல்லாம் சொல்கிறான்.என் முகம் அவ்வளவு துல்லியமாகவா உணர்வுகளை படம் போடுகிறது?இல்லை மேஜிக்கல் சயின்ஸ் ஸ்டூடண்டா?
So you mean?
"yes,எனக்கு உங்கள பிடிச்சிருந்தது,ஆனா நெறய யோசிக்க வேண்டி இருந்தது"
“நீங்க சொல்றதெல்லாம் உண்மையா?எங்க வீட்ல சொல்லவேயில்ல”
“அதுசரி,எந்த வீட்டுல சொல்வாங்க?உங்க நம்பர் கேட்டேன்,சாரி சொல்றதுக்கு,திட்டிவிட்டுட்டாங்க!”,என்றான் ஒரு ஸ்மைலியைப்போல் சோகமாக. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அவன் தவறுமில்லை ஆனால் அதற்கு வேறு யாரும் பொறுப்பேற்கவும் முடியாத நிலை.
எனக்கப்போதுதான் கொஞ்சம் சுரீரென்று உறைத்தது.
“அம் ரியலி சாரி,இதுல இவ்வளவு விஷயம் இருக்கும்போது,நானும் இளாவும் உங்கள திட்டிட்டோம்,யு ஆர் ரியலி டிஃப்ரெண்ட்!”
அதே பழைய சிரிப்பை இப்பொதும் மென்மையாய் முகத்தில் படர விட்டான்.அடுத்த ரயில் வருவது தெரிந்தது.இப்போது கிளம்பினால் சரியாக மதிய உணவுக்கு அலுவலகம் செல்ல நேரிடும்.பரவாயில்லை,இன்று மாலை அதிகப்படியாக இரண்டு மணிநேரம் உழைத்துக்கொள்ளலாம்.
 “உங்க நம்பர் குடுக்க முடியுமா,இஃப் யு ஆர் ஓகே?”
என் எண்ணைக்கொடுத்து அவன் எண்ணை வாங்கி  அவசர அவசரமாக  பண்டமாற்றி எச்சரிக்கையாக நான் பெண்கள் பெட்டியிலும் அவன் முதல் வகுப்பிலும் ஏறினோம்.முதலிலேயே பெண்கள் பெட்டியில் ஏறியிருந்தால் இன்று இந்த சம்பவம் நடந்திருக்காது.கடவுளுக்கு ஒரே நேரத்தில் நன்றியும் சாரியும் சொல்ல வேண்டுமெனத் தோன்றியது.முதல்வகுப்புப்பெட்டியிலிருந்து அவன் ஒருமுறை தொங்கியவாறு திரும்பிப்பார்த்தான்.நான் உள்ளே போய் மறைந்தேன்.
அவன் கதையை கேட்டதும் மனம் குழம்பத்தொடங்கியது.சரியாக அவன் என்னைப்பார்த்துவிட்டு போன ஒரு வாரத்திற்குப்பிறகு நான் என்ன செய்ய வேண்டுமென எனக்குப் புரிந்தது.இப்போதைக்கு திருமணத்திற்கு ஒரு இடைவெளியும் என் மனதிற்கேற்ற ஒரு மாற்றமும் தேவைப்பட்டது.சின்ன வயதிலிருந்தே சிவில் சர்வீசஸ் மீது ஈர்ப்பு உண்டெனக்கு.என்றாலும் படித்து முடித்தவுடன் வேலை,பிரச்சினையில்லாத வாழ்க்கை என எதை பற்றியும் யோசிக்காமல் இருந்தேன்.இவன் மறுத்ததும் எதையோ யாருக்கோ நிரூபிக்க எண்ணியே சிவில் சர்வீசஸ் தேர்வெழுத ஆசைப்பட்டேன்.அடுத்த வாரத்திலிருந்து வகுப்புகள் ஆரம்பம்.முதல்முறையாக வாழ்க்கையில் குழம்பாமல் ஒரு முடிவு எடுத்ததாக எண்ணினேன்.
இதென்ன இப்போது இவனது மறுநுழைவு?
ஏன் எப்போதும் எனக்கு இரவின் தெளிவைத்தந்துவிட்டு அதில் ஒரு குழந்தையின் கூச்சலையும் கொடுக்கிறார்கள்?ஆனால் நான் தெளிவாக இருக்கிறேன்.எனக்கு எந்த சலனமும் வேண்டாம்.அந்த எண்ணை அழித்துவிடப் போகிறேன்.
டெலிட்டில் கையை வைக்கும்போது அவனிடம் இருந்து ஒரு குறுந்தகவல்
“I am getting down.c u tomo.nice to c u.”
நாளைக்குமா?!இது எங்க போய் முடியுமோ!நான் அந்த எண்ணை அழித்தேனா என்று கேட்கும் அளவுக்கு சிறுகுழந்தையாக இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அன்று அலுவலகம் முடிந்து வந்ததும் மூன்று வாலுகளும் ஒன்றாக மாடிக்குப் போனோம்.இன்று எங்களுக்கு நிலாச்சோறு நாள்.மாதத்தின் முதல் திங்கள் நிலாச்சோறு நாள்,வார்டனுக்கு தெரியாமல்தான்.ஓட்டலில் வாங்கி வந்திருந்த சாப்பாட்டை உள்ளே அனுப்பிக்கொண்டே கதையை சொல்லி முடித்தேன்.
“பரவால்லப்பா நல்ல பையனாத்தான் தெரியறான்”-அச்சு.
“ஹ்ம்ம்ம் அப்ப அவனுக்கு வாழ்க்க கொடுத்திற வேண்டியதுதான்”-லவ்.
“அவன் என்ன நெனக்கிறானோ,யாருக்கு தெரியும்,நான் பாட்டுக்கு ஒழுங்கா சிவில் சர்வீசஸ் படிக்க போறேன்”-சீதாவாகிய நான்.
“போடி பாட்டி,நீ போய் சிவில் சர்வீசஸ் படிக்க போறியா,இந்து பேப்பர்கூட படிக்க மாட்ட”-லவ்
“ஹேய் லூசு...முக்கியமான விஷயம் அந்த அருந்ததி யாருன்னு கேட்டியா?”-இளா
ஆமா இல்ல,அந்த அருந்ததி யாரு???

Tuesday, March 22, 2011

இது முன்பனிக்காலம்! (4)

“பிடிச்சிருக்கா சீதா?”

“தெரியல சுஜி,மொதல்ல அவங்களுக்கு என்ன பிடிக்கட்டும்,அப்பறமா யோசிச்சிக்கலாம்”

“பிடிச்சிருந்துதுன்னா?”

“எனக்கு தெரியல சுஜி,இவந்தானான்னு,எல்லாமே ரொம்ப ஃபாஸ்ட்டா நடக்குதோன்னு தோணுது”

“அம்மா சொல்றத கேட்டல்ல,நேரம்னு வந்தா அதெல்லாம் தானா நடக்கும்”

“ஆனா என்னோட வாழ்க்கய நாந்தான் தீர்மானிக்கனும்,so called நேரமில்ல”

“Its too late now,இதுக்கப்புறம் நீ ஒருத்தன லவ் பண்ணி,புரிஞ்சிகிட்டு அப்பாம்மாவ கன்வின்ஸ் பண்ணி,அதுக்குள்ள எனக்கே புள்ள பொறந்துரும்,அதுக்கு நீ பேசாம அவங்க சொல்ற பையனயே கல்யாணம் பண்ணிக்கலாம்”

“அவங்க சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்கறதுல பிரச்சின இல்ல சுஜி,அதுல லவ் இருக்கனும்ல”

“ஒண்ணு சொல்லவா,லவ் பண்ணிட்டு எப்டி அரேஞ்ஜ்டு மேரேஜ் ஆகனும்னு எதிர்பார்க்க முடியாதோ,அப்டித்தான் அரேஞ்ஜ்டு மேரேஜ்ல லவ்வ ஆரம்பத்துலயே எதிர்பார்க்கறதும்,பேசி பழகினாத்தான தெரியும்?”

“ஆனா லவ் பண்ற பையன் பிடிக்கலன்னா விட்டுட முடியும்,ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டா பண்ணிகிட்டதுதான் இல்லயா”

“இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற? லவ்வும் பண்ண மாட்ட?ஆனா வர்றவன் உன்ன லவ் பண்ணனும்னு சொல்ற?அதானே”,என்று சொல்லிவிட்டு சுஜி லெக்சரருடன் பாடம் கேட்கத் தொடங்கினாள்.அம்மாவும்,சித்தியும் அடுத்த வீட்டு ஆண்ட்டியுடன் கதையளக்கும் நேரந்தான் அவளுக்கு பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் டைம்!நான் மறுநாள் விடுதிக்கு செல்ல கிளம்பிக்கொண்டிருந்தேன்.அந்த பட்டுப்புடவையை மடித்து வைக்கும்போது எனக்குள் பலவிதமான எண்ணங்கள் ஓடின,அதில் முக்கியமான ஒன்று, “அம்மாவ ட்ரைகிளீன் பண்ண சொல்லனும்”.

அலுவலக குரைப்புகளை சமாளித்துவிட்டு விடுதி வரும்போது மணி எட்டரை.அதுவரை எனக்காக சாப்பிடாமல் காத்திருந்த லவ் என்கிற லாவண்யாவும்,அச்சு என்கிற அர்ச்சனாவும் திட்ட முடியாமல் பாசமாய் தட்டை எடுத்துக்கொடுத்து இரவு உணவுக்கு அழைத்துச்சென்றனர்.பெண் பார்த்த கதையை கேட்க அத்தனை ஆர்வம் அதுகளுக்கு.அந்த காய்ந்துபோன சப்பாத்தியோடு தாலோடு என் கதையையும் சேர்த்து தள்ளிக்கொண்டிருந்தோம் உள்ளே.

“பிடிச்சிருக்காடி?”,அச்சு கேட்டாள்.

“போடீ எல்லாரும் இதே கேள்விய கேக்கறீங்க,எனக்கு என்ன சொல்லன்னே தெரியல”

“எவ்ளோ ஈசியான கேள்வி,செமஸ்டர் எக்ஸாம் பேப்பர் மாதிரி அவ்ளோ பில்டப்பா இதுக்கு?”,லவ் வழக்கம்போல ஒரு எடுத்துக்காட்ட காட்ட,

“இல்ல,அவனுக்கு என்ன பிடிச்ச மாதிரிதான் தெரியுது,ஆனா அவன்கிட்ட ஒரு இண்ட்ரெஸ்ட்டே இல்ல,எனக்கு அதுதான் வித்தியாசமா தெரியுது”

“ஒருவேள அவன் கொஞ்சம் அவ்ளோ ஈசியா உணர்ச்சிகள வெளிக்காட்டாத ஆளா இருப்பான்”

“என்னமோ”, காகம் இறந்ததற்கு மட்டும் கலவரம் காட்ட தெரியுமா?

பேசிக்கொண்டே அறை வந்து சேர்ந்தோம்.அங்கே இளவழகி மடிக்கணினியோடு wi-fi சிக்னல் தேடிக்கொண்டிருந்தாள்.

“இதுக்கு நீ உன் ஆளுக்கு தீப்பெட்டி வாங்கி குடுத்து கயிறு கட்டியே பேசிருக்கலாம்டி”,லவ் மெய்க்கூற்று.

அவள் ஆள் எங்கள் விடுதிக்கு அடுத்த அபார்ட்மெண்ட்டில்தான் குடியிருந்தான்.அந்த பத்து மணி நேரம்கூட விடாமல் முகம் பார்க்கனுமாம்,வீடியோ சாட்தான்!

“சிக்னல் கெடச்சிருச்சு!”,என இளவழகி டொட்டாயிங் என்று ஸ்கைப்படிக்க ஆரம்பித்தாள்.

எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.மிஸ்டர்.காக்கைசித்தனின் பெயரைச் சொல்லி முகனூலில் தேடச் சொன்னேன்.வரிசையான சம்பந்தமற்ற முகங்கள்.அவன் அப்பா பெயரையும் இணைத்ததில் மூன்று ஒத்திருந்தன.

“முதல் ஆளு டெக்ஸாஸ்ல எம்.எஸ் இதில்ல”

“அடுத்தவன் சாஃப்ட்வேர் இதுவும் இல்ல”

சந்தேகமில்லாமல் அடுத்த அறிமுகம் அவனுடையதானது.

புகைப்படம்,படிப்பு,கல்லூரி வரிகளுக்கு அடுத்து தேள் கொட்டியது.

“In a relationship with Arundhati”,WTH!

“என்னடி இது…”

எனக்கு அந்த நிமிடம் அவனைக் கொல்ல வேண்டும் போல இருந்தது.

“ஹேய் ரிலாக்ஸ்,may be this is old!”,அச்சு என் கைபிடித்து அழுத்த,எனக்கு எதுவும் புரியவில்லை.ஏன் இப்படி,எனக்கு மட்டும்?

“இப்ப ரிலேஷன்ல இருக்கானாங்கறதுதான் முக்கியம் சீது,அவன்கிட்ட பேசி முடிவெடு”,லவ் அறிவுறுத்த

“whatever,அவன் இத பேசும்போதாவது சொல்லிருக்கனும்ல,இதெல்லாம் ஏமாத்துவேல”,இளவழகி முற்றுப்புள்ளி வைத்தாள்.

நான் அடுத்த பத்து நிமிடங்களில் அம்மாவை அழைக்க கைபேசியின் எண்ணொத்தினேன்.

“நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் மற்றொரு அழைப்பில் இருக்கிறார்”,இரண்டு மூன்று முறை அழைத்ததும் அம்மா லைனில் வந்தாள்.

“அம்மா யாருகிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டிருந்த?”,வள்ளென்று விழுந்தேன்.

“இல்லம்மா வந்து”

“என்னம்மா சீக்கிரமா சொல்லு..எனக்கிருக்கற டென்ஷன்ல நீ வேற இழுத்துகிட்டு”

“அந்த பையனோட மாமா பேசினாரும்மா,அவன் இப்ப கல்யாணம் வேணான்னு சொல்றானம்மா”

“என்னம்மா சொல்ற?”,எனக்கு அய்யோன்னு இருந்தது.அவன் என்னை நிராகரிப்பதாவது?

“அவனுக்கு கல்யாணம் பிடிக்கலயாம்மா,அவன் இதுக்குமேல கம்பெல் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டானாம்மா”

“நான் பாட்டுக்கு செவனேன்னு தானேம்மா இருந்தேன்?இப்ப திருப்தியா ஒனக்கு?”,எனக்கு குரல் உடைந்தது.

“சாரிடி செல்லம்,இனிமே உன்ன கேக்காம எதும் செய்ய மாட்டோம்,அவன் வேணாம்,உன் நெறம்கூட இல்லை”

“நான் ஒன்னும் சின்ன கொழந்தையில்லம்மா,ப்ளீல் ஃபோன வச்சிரு”

“இல்லடி ராசாத்தி,அப்பாவும் கொஞ்ச நாளக்கி உன்ன தொந்தரவு செய்ய வேணான்னு சொல்லிட்டாரு,மனசில் எதயும் வச்சிகாதடீ,நல்லா சாப்பிடு,தூங்கு,நீ என்னவோ சொல்ல வந்தியே?”

“அதொன்னுமில்லம்மா,விட்டுடு,தூக்கம் வருது,குட்நைட்”

விஷயம் தெரிந்த என் தோழிகள் முகத்தில் சந்தோஷப்படுவதா வருத்தப்படுவதா என்ற குழப்பம் தெரிந்தது.

“அவன் சரியான ஃப்ராடுடீ,பூன மாதிரி வந்து பாத்துட்டு,இப்ப வேண்டான்னா என்ன அர்த்தம்”

“நம்ம சீத்தூக்கு என்னடி கொறச்சல்,இவனல்லாம் தூக்கி போட்டு மிதிக்கனும்”

அவர்கள் எனக்காக அங்கே பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதைவிட என்னைப்பற்றி பேசுவது எனக்கு எரிச்சலைத் தந்தது.

“Will you please shutup!”

அவசர அவசரமாக அறையைவிட்டு வெளியேறி மாடிக்கு போனேன்.நட்சத்திரங்களெல்லாம் என்னை பார்த்து கிண்டல் செய்வதுபோல சிரித்தன.எனக்கு மட்டுமே எழுதிய கவிதையைப்போல் ஒருவனை எதிர்பார்த்து அது யாரோ இரசித்த கவிதையென தெரிந்த ஏமாற்றம் என்னை அரித்தது.நான் நிராகரிக்கும்முன் அவன் முந்திக்கொண்டது அவமானமாக இருந்தது.எங்கோ வானத்தில் வால்நட்சத்திரம் ஒன்று உதிர்ந்து விழுந்துகொண்டிருந்தது.எதிர்பார்ப்புகள் இருக்கும்வரை உதிரவேண்டியதுதான் என்று எனக்கு புரிந்ததது.அந்த நாளை காலம் முழுக்க நான் சபிக்கப் போகிறேனென்று தெரிந்தது.அவன் சிரித்த சிரிப்பு என்னை பைத்தியக்காரியாக்கியதற்காக என்று புரிந்தது.கொஞ்ச நேரம்தான்,அதற்குள் பழைய சோகங்களுடைய அலமாரியில் இதுவும் போய் அமர்ந்து கொண்டது.அவனை கற்பனையாக திட்டி தெளிந்துபின்,அடுத்த முறை அவனை பார்த்தால் என்ன சொல்வேனென ஒத்திகை பார்க்க முடிந்தது.

இது அந்த காலம்-முன் பனிக்காலம்-(1)(2)(3)

இது முன்பனிக்காலம்! (3)

வரவேற்பறையில் அந்த கூட்டம் காத்திருப்பது எனக்காகத்தான்.என்னை காக்க வைத்திருப்பதென்னவோ நல்லநேரத்திற்குத்தான். காத்திருக்கும்போது உள்ளுக்குள் ஒரு சின்ன சலனம்.முதல் முறை புடவை கட்டி நடக்கத்தெரியாமல் நடக்கும்போது வரும் அவஸ்தை.பிடித்த யாரோ நீண்ட நேரம் உற்று பார்க்கும்போது வரும் சிலீர்.ஒருவேளை உனக்கு பிடித்துவிட்டால்?அப்பாம்மா எதிர்பார்க்கும் அத்தனை தகுதியும் இருந்துவிட்டால் என்ன செய்வாய்? வேறென்ன செய்வாங்க கல்யாணந்தான்!சுஜி அவ்வப்போது ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துக்கொண்டு கதவு பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.

1.ஒருவேளை சுஜியை அவனுக்கு பிடித்து அவளையே டிக் அடித்துவிட்டால்? ஹய்யா நான் எஸ்கேப்!

2. ஒருவேளை சுஜியை அவனுக்கு பிடித்து அவளையே டிக் அடித்துவிட்டு,சுஜி திடீரென்று அலைபாயுதே ஸ்டைலில் என்னையும் சேர்த்து போட்டுக்கொடுத்துவிட்டால்!

3.ஒருவேளை மௌனராகம் மாதிரி, “நான் நல்ல பொண்ணு இல்ல,சொன்ன பேச்சு கேக்க மாட்டேன்,சமைக்கத் தெரியாது”,என்றால்?

4. ஒருவேளை மௌனராகம் மாதிரி அவன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு சைலெண்ட்டாக வெளியேவந்து என்னை ரொம்ப பிடித்திருப்பதாக போட்டுக்கொடுத்துவிட்டால்? என்னால் ப்ளாஷ்பேக் சொல்லும் சீனில், “ஏன்னா?ஏன்னா என் இதயம் என்கிட்ட இல்ல,என் இதயம் என்கிட்ட இல்ல”,என்றெல்லாம் கதறமுடியாது.

நான்கு சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து பார்த்ததில் எல்லா வழியிலும் எனக்கு மட்டுமே பாதகங்கள் என அறிந்தேன்.

இப்படியாக நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது,எனக்கு சம்மன் அனுப்பினார்கள்.நடுஹாலில் ஆஜர்!சுஜி பையன் யாரென்று சொல்லி அனுப்பியிருந்தாள் அவளுக்குப் பிடிக்காத ப்ளூகலர் சட்டை!அவ்வளவு மோசமில்லை.அத்தனை பேரும் இருந்ததால் என்னால் அவனை சரியாக பார்க்க முடியவில்லை.

பையன் வீட்டு சின்னக்குழந்தை ஒன்று என் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டது. “இப்பவே உனக்கு அத்தைய பிடிச்சிருச்சா?”,என்று நாத்தனார் லுக் இருந்த ஒருத்தி சொல்ல எல்லோரும் ஏதோ வில்பர் சற்குணம் வீடியோவை யூடியூபில் பார்த்தமாதிரி “ஹஹ்ஹஹ்ஹா ஹிஹ்ஹ்ஹீ”,என்று ஒரே சிரிப்பு,என்ன ஒரு எகத்தாளம்!அந்த கூட்டத்தில் தெளிவாக சம்பிரதாயத்துக்கு சிரித்தது நானும் ப்ளூ ஷர்ட்டும்தான்!அவ்வப்போது தலைமுடியை ஒதுக்குவது மாதிரி நானும்,கண்ணாடியை சரிப்படுத்தும்போது அவனும் யாருமறியாமல் பார்த்துக்கொண்டோம்.

நடுவில் எனக்குத் தராமல் அவர்கள் குடும்பம் மிக்சரும்,ஸ்வீட்டும் சாப்பிட்டது.டிபன் சாப்பிடாமல் இருப்பதற்கு காரணமாக, “தேதி குறிக்கிறவரக்கும் கைய நனைக்க மாட்டோம்ல!”அடேங்கப்பா!

சொந்த ஊர்,கிரிக்கெட்,அரசியல் எல்லாம் பேசிவிட்டு “பொண்ணு மாப்ள வேணா தனியா பேசட்டுமே” என அந்த குடும்பத்து பெரியவர் ஒருவர் சொன்னார்.

“மாடி பால்கனிலேர்ந்து பேசட்டுமே”

அவனும் நானும் மாடி பால்கனியில் தனியாக(!) பேச, துணைக்கு என் அம்மா,அவன் அம்மா,மற்றும் சித்தியும் வந்து பத்தடி தள்ளி நின்று கொண்டார்கள்.நான் என் கைகளில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட வளையல்களை எண்ணிக்கொண்டிருந்தேன்.அவன் தூரத்தில் தெரிந்த மின்சார வயரையும் அதில் அமர்ந்திருந்த காக்கையையும் உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.எனக்கு பயமாக இருந்தது.அவன் பார்வை கொஞ்சம் தீவிரவாதி மாதிரியும் கொஞ்சம் இலக்கியவாதி மாதிரியும் விட்டால் திடீரென்று ஒரு கவிதை சொல்ல போகிறவன் போலவும் ஒரு யத்தனத்தை வெளிப்படுத்தினான்.திடீரென “காக்கா செத்துருச்சு”, என்றான். அவன் என்னிடம் பேசிய முதல் வார்த்தை!

என்னது?

“இல்ல ஷார்ட் சர்க்யூட் ஆகி செத்துருச்சு!”, என்றான்.

கரெண்ட் கம்ப காக்கா கீழே விழுந்திருந்தது. முதல் முதல் பேசும்போது “பிடிச்சிருக்கா”, “நீ ரொம்ப அமைதியோ”, “இந்த எடம் நல்லா இருக்கு”,இப்படி ஏதாவது சொல்லியிருக்கலாம்.அந்த முதல் வார்த்தைக்காகவே நான் அவனை வெறுத்திடுவேன் என தோன்றியது.இறந்துபோன காக்கைக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலியா செலுத்த முடியும்?எனக்கு அத்தனை காருண்யம் இல்லை.அதற்கடுத்த நொடி அவன் பேசத்தொடங்கினான்,பள்ளி,கல்லூரி வாழ்க்கையை பற்றி,அவன் எதிர்பார்ப்புகளை பற்றி.என்னை கேட்கவில்லை என்பதைவிட நான் சொல்லவில்லையென்பதே சரியாக இருக்கும்.அவன் எதிர்பார்ப்புகளின் அடுத்தவரியாய் நான் தொடர்ந்தேன்.

“கல்யாண்ஜி படிச்சிருக்கீங்களா?”

யாரு கல்யாணியா?”,என்றான்.

எனக்குத் தெரியும் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு இலக்கிய ரசனை அடிப்படை இல்லையென.ஆனால் அவர் ஒரு கவிஞர் என்றதும், “அதெல்லாம் டைம் வேஸ்ட்டுங்க படிக்கறதில்ல!”,என்றான்.

என்னை நானே ரசிக்கும் அந்த ஒரே விஷயமான என் கவிதைகளையும் அவன் இரசிக்கப்போவதில்லை.

“அப்போ ஹாபீஸ்?”

“கிரிக்கெட் பாப்பேன் பைத்தியம் மாதிரி,ஹைலைட்ஸ் முதற்கொண்டு!”

என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.தொலைக்காட்சியை அவனுக்கு தந்துவிட்டு எனக்கு பிடிக்கவே பிடிக்காத கிரிக்கெட்டை வாழ்க்கை முழுக்க அவனுக்காக சகிக்க முடியாது.என்னால் அதற்குமேல் பேச்சில் சுவாரஸ்யம் காட்ட முடியவில்லை.அதற்குள் பத்து நிமிடங்கள் ஆகவே அம்மாவும்,சித்தியும் இருமத் தொடங்கினார்கள்.அலாரம் அடித்ததை உணர்ந்து இடத்தை காலி செய்யும்போது அவன் கண்களில் ஒரு சின்ன சிரிப்பு புதிதாய்.எனக்கு பிடிக்காத நேரத்தில் வரும் அப்ரிசியேஷனைப் போல் இருந்தது.அவர்கள் ஊருக்குபோய் குடும்ப சாமியாரை கலந்தாலோசித்துவிட்டு நல்ல சேதி சொல்வதாக கிளம்பினார்கள்.எனக்கு அவர்கள் கிளம்பும்முன்னரே தெரியும் நான் என்ன பதில் சொல்வேனென்று. என்னால் ஒரு தொலைக்காட்சி தியாகியாக வாழ்க்கை முழுக்க இருக்க முடியாது. ஆனாலும் அந்த கடைசி சிரிப்பு எனக்கு பிடித்திருந்தது!

இது அந்த காலம்-முன் பனிக்காலம்-(1)(2)

இது முன்பனிக்காலம்! (2)

கைபேசி சிணுங்கியது.அப்பா லைனில் இருந்தார்.எனக்கே எனக்கான கோபமும்,அலட்சியமும் பொங்கி அழைப்பை அமைதியில் விட்டேன்.அதற்குப்பிறகும் இரண்டு அழைப்புகள்,வந்த வெறுப்பில் கட்டில்மேல் வீசிவிட்டு என் கைபேசியைப்பற்றி யோசிக்கத்தொடங்கினேன்.அது சவம் மாதிரி படுத்திருந்தது.அது தன் பிறவிப்பயனை அனுபவித்ததேயில்லை.தேயத்தேய குறுஞ்செய்தி அனுப்பியதில்லை.இரவெல்லாம் கதைகள் பேசி அது உயிரிழந்ததில்லை.எப்போதும் ஒரு பாட்டுப்பெட்டியாகவோ,காமிராவாகவோ மட்டுமே இருந்திருக்கிறது.சில சினேகிதிகளைப் பார்க்கும்போது கைபேசியிலேயே மூச்சு விட்டு எனக்கெல்லாம் கைபேசி தேவையா என என்னையே யோசிக்க வைத்துவிடுவார்கள்.நான்கூட அதைப்போலவே மாறிவிடுவேனா?சுவாரஸ்யமற்ற ஒரு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வேனோ என உள்ளுக்குள் ஒரு நாய்க்குட்டி நான் பாவமில்லையா என எட்டி பார்த்தது.பாவம் பார்த்தென்ன,யாரையும் நம்பாவிட்டால் இப்படித்தான் என வெடுக்கென ஒரு காவல்காரி கதவை சாத்தினாள்.மரங்களை வெட்டிவிட்டு சிட்டுகுருவிக்கு தண்ணீர் வைக்கும் போலித்தனமாகவும் பட்டது.

ரொம்ப யோசித்ததால் பசி குடலை எம்பிராய்டரி பண்ணத் தொடங்கியது.(பின்ன?சும்மா வயிற்றைக் கிள்ளியதுன்னே சொல்லிகிட்டு!).இருந்த அரை பாக்கெட் மாகியை எடுத்து எனக்குத் தெரிந்த ஒரே சமையலை செய்யத்தொடங்கினேன்.தட்டில் போட்டு கரண்டியை வைத்த சமயம்,

“ஹேய் எனக்குடி கல்யாணப் பொண்ணு!” என எகிறி தட்டில் கைவைத்தது ஒரு உருவம்.சுஜிதா!என் சித்தப்பா மகள்!

“என்ன கொரங்கே காலேஜ் போகலயா?அதிசயமா மலய விட்டு எறங்கி வந்திருக்க!”

அவள் கல்லூரி ஒரு மடுவில்,ஒரு சின்ன ஏரி பக்கத்தில் மேயும் வாத்துகள் என அழகுணர்ச்சியோடு அமைக்கப்பட்டிருக்கும்.அந்த இடத்திற்கே உரிய காதல் போன்ற பெருவியாதிகள் நுழையக்கூடாதென்று மிகக்கவனமாக அவள் வாத்தியார்கள் சட்டதிட்டங்கள் தீட்டினாலும்,சுஜி சாதாரண ஆளில்லையே!இந்த பயிர் வேலியையே மேய்ந்து அதாவது அவள் லெக்சரரையே காதலிக்க ஆரம்பித்துவிட்டது.ரொம்ப சேஃபாக யாரிடமும் மாட்டாமல் ஸ்டாஃப் ரூமிலேயே காதல் வளர்த்துக்கொண்டிருந்தார்கள்.

“ப்ராஜெக்ட் டீ,அவந்தான் கைடு”

“ப்ராஜெக்ட் வெளங்கிரும்!”

நிறைய சண்டை போடுவோம்,ஆனாலும் எந்த விசேஷம்,நல்லது கெட்டது என்றாலும் சுஜிதா வராமல் நான் போவதில்லை,அவளும் அப்படித்தான்.பின்ன,எங்க சொந்தக்காரங்க மொக்கய தனியா எப்படி சமாளிப்பது?

“என்ன சீதா இந்த வருஷம் கல்யாண சாப்பாடு போட்றுவல்ல?”

“என்ன மாமா நீங்க இந்த வருஷம் மண்டைய போட்றுவீங்கல்ல?”, நினைக்க மாட்டாள்,கேட்டு விடுவாள் சுஜிதா.அதுக்கப்புறம் அந்த மாமா ஏன் எங்க பக்கம் வரப்போகிறார்.பேச வேண்டிய இடத்தில் பேசுவாள்.மற்றநேரத்தில் என்னை பேசவைத்து திட்டு வாங்கிக் கொடுப்பாள்.

“ஹேய் மேகி நல்லா இருக்குடி கல்யாணப்பொண்ணே”,என் சமையலையும் இரசிக்கும் ஒரு ஜீவன்,புளகாங்கிதம் அடைந்துவிட்டேன்!

நன்றி உணர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,

“யெஸ் ஐ நோ ஐ நோ,ஆனா அந்த கல்யாணப்பொண்ண கட் பண்ணிரேன்,இர்ரிடேட்டிங் ஆ இருக்கு”

“இதுக்கே இப்டின்னா அப்ப நாளக்கி அவங்கள்ளாம் வந்தா என்ன பண்ணுவ?”

“அவங்கன்னா எவங்க?”

“தெரியாத மாதிரி கேக்குற,உன் வருங்காலம் தான்”

“நாளக்கின்னா நாளக்கேவா,அப்டியே போஸ்ட்போன் பண்ண வேண்டியதுதான்,லீவு கெடக்கல,ஒடம்பு சரியில்லன்னு”

“ஹேய் லூசு நாளக்கின்னா நாளக்கேதான்,உன்ன நாளக்கி பொண்ணு பாக்க வர்றாங்க தெரியாதா ஒனக்கு?”

“என்ன ஒளருற?”

“எனக்கே தெரியும் கல்யாணப்பொண்ணு உனக்குத்தெரியாதா?”

“சத்தியமா தெரியாதுடி,ஜாதகம் பாக்கத்தான் போறதா சொன்னாங்க”-காலை கண்ட கனவு பலிச்சிருமோ?

“உனக்கு பெரியப்பா கால் பண்ணாரே நீதான் எடுக்கல,அவங்க ஏதோ பர்ச்சேஸ் பண்ணப் போறாங்க,என்ன உனக்கு தொனயாயிருக்க சொல்லி அனுப்பிச்சாங்க”

என் கைபேசி கட்டில்மேல் இளித்துக் கொண்டிருந்தது.அதற்காக என் அனுமதி இல்லாமலே எதற்கு இந்த பெண் பார்க்கும் @ ஒஃபிஷியல் சைட் பிசினஸ்?சுஜி ப்ராஜெக்ட் ரெவ்யூக்கு மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பதுபோல் அவனது விவரங்களை ஒப்பிக்கத் தொடங்கினாள்.

“அவன் ஏதோ ஒரு கம்பெனில எதோவா இருக்கானாம்,பாக்க எப்டி இருப்பான்னு தெரியல,போட்டோ வரும்னு சொன்னாங்க,ஆனா திடீர்னு இன்னிக்கி ஜாதகம் பாத்தாங்க,எட்டோ,பத்தோ பொருத்தமோவாமே,செம்மயாமே,அவங்க வீட்டுலகூட பேசுனாங்க, அவங்க எங்க பையன் இப்ப சென்னைலதான் இருக்கான்,நாளன்னிக்கி வைசாக் போயிருவான்,நாளக்கே பாத்துரலாம்னு சொல்லிட்டாங்க”

“வைசாக் என்ன பாகிஸ்தான்ல இருக்கா இல்ல நாந்தான் என்ன ஹாரிபாட்டர் படமா இப்பவே பாக்க,நீகூட என்கிட்ட ஒரு வார்த்த சொல்லல”, என நான் கோவமாக பார்க்க,

“ரிலாக்ஸ்,பாக்கத்தானே வரப்போறாங்க ஏன் ஓவர் சீன் போடற?”

“அதெப்படி என் பெர்மிஷன் இல்லாம என்ன பாக்க வரலாம்?”

“என்ன கேக்காத உன்ன பெத்தவங்க வருவாங்க அவங்கள கேட்டுக்கொ”,என்றபடி பல்லிளித்துக்கொண்டே அந்த லெக்சரருக்குப் குறுஞ்செய்தி அனுப்பத்தொடங்கினாள்.அவள் வேலை அவளுக்கு! நான் அவன் பேரைக்கூட உங்களிடம் சொல்லப்போவதில்லை.எனக்கு விருப்பமில்லாதவனையும் என்னையும் பெயரளவில் நீங்கள் இணைப்பதைக்கூட நான் வெறுக்கிறேன்.அதற்குமேல் சுஜி சொன்ன எதுவும் எனக்கு ஏறவில்லை.முதல்முறை நேர்முகத்தேர்வை சந்திக்கும்போது தொற்றும் பதற்றத்தை திரும்பவும் உணர்ந்தேன் என்றெல்லாம் பொய் சொல்லப்போவதில்லை.நாளை என்ன பேசவேண்டும் எப்படி இதை நிறுத்த வேண்டுமென மனதுக்குள் யோசனைகளை எடைப்போட்டு கொண்டிருந்தேன். வாசலில் “டொட்டொட்டொட்”- ஆட்டோ வந்து நின்றது. முதலில் சித்திதான் உள்ளே நுழைந்தாள்.

“சீதாக்கு இப்பவே கல்யாணக்களை வந்துருச்சு இல்ல”

“பேசாதீங்க சித்தி,நீங்ககூட சொல்லல இல்ல”

“இதுல என்னடா இருக்கு,எல்லார் வீட்டுலயும் நடக்குறதுதானே”

“இப்டி திடீர்னு சொன்னா எப்டி சித்தி?எனக்கு கல்யாணம்ங்கிற ஐடியாவே இல்ல”

“இப்ப வரவழைச்சிக்கோ,அப்பாக்கும் வயசாகிட்டே போகுது,தங்கம் வெல வேற ஏறுது,உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டா அவங்க கொஞ்சம் அக்கடான்னு இருப்பாங்க,அதுக்கப்புறம் சுஜிக்கு வேற பாக்கனும்”

அதற்குமேல் அவர்கள் என்னை பொருட்படுத்தவில்லை.இவள் ஒரு வேலையில்லாதவள் லுக்கை விட்டுவிட்டு சமையல் வேலையை பார்க்கப்போனார்கள்.

“அம்மா இப்ப எதுக்காக இவ்வளவு அவசரமா இந்த ஏற்பாடு,மாவு பிசையறதெல்லாம்”

“பையன் பேரு !@#$%^ (சொல்ல மாட்டேனே!),ஒரே பையன்,பிக்கல் பிடுங்கல் இல்ல,சென்னைல ஒரு வீடு,சொந்த ஊருல ஒரு அஞ்சு ஏக்கர்,போடுறத போடுங்கனு சொல்லிட்டாங்க,இதவிட வேறென்ன வேனும்?”

“அவன் வயசென்ன?”

“உன்னவிட அஞ்சு வயசுதான் பெரியவன்”

“அஞ்சு வயசுதானா?அஞ்சு வருஷம் முன்னாடி கல்யாணம் பண்ணிருந்தா இன்னேரம் கொழந்தைய கான்வெண்டில விட வேண்டியவன்”

“இங்க பாரு,எனக்கும் உங்கப்பாக்கும் பத்து வயசு வித்தியாசம்,நாங்க நல்லா இல்ல”

“ஓவர் கான்பிடன்ஸ் மம்மீ”,சொல்ல நினைத்தேன்,சொல்லவில்லை.

“உங்கப்பா ஒத்துக்கிட்டார்,அவர் வார்த்தைக்காவது ஒரு நாளக்கி நல்ல பொண்ணா நாங்க சொல்றத கேளு,சுஜிய பார்த்து கத்துக்கோ,நாளக்கி பாரு,பேசு.உனக்கு பிடிச்சிருந்தாதான் கல்யாணம்.”

அப்பாவின் வாக்குத்தத்ததிற்காவது நான் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம்.அம்மா சொல்வது கொஞ்சம் வேலைக்காவதுபோல் இருந்தது.சுஜியைத்தேடி மாடிக்குப் போனேன். படியேறும்வரை சுஜியை பற்றி சொல்கிறேன் கேளுங்கள்.சுஜி ஆள் சிவப்பு,ஒல்லி,உயரம்,நீளமுடி,பெரியவர்கள் சொல்லி சமையல்,கோலம்,கொஞ்சம் படிப்பு என கல்யாணத்திற்கெனவே பிரத்யேகமாக வளர்க்கப்பட்ட பிராணிகளில் ஒன்று.ஒயிட்லகான்! சுஜி இப்படி லேசா லேசா என வீட்டில் அவள் விஷயத்தை சொன்னால் “தீபாவளி தீபாவளி”,எனக்குத்தான்.அவள் வாயில் விரல் வைத்து கடிக்க சொல்லி கொடுத்ததே நாந்தான் என சித்தி சொன்னாலும் சொல்லுவாள்.ஆனா இந்த பக்கி வேகாத வெயில்ல கடல போட்டுட்டுருக்கு?

“ஹ்ம்ம்ம் அப்புறம் சாப்டிய்யா”,என்பது போன்ற உபயோகமான காவிய உரையாடல்களில் ஈடுபட்டிருந்தாள்.கொஞ்ச நேரத்தில்

“நான் சொல்றதயே கேக்க மாட்டியா,அந்த ப்ளூ ஷர்ட் போடாதன்னு எத்தன தடவ சொல்றது?” என மெதுவாக ஆரம்பித்து

“வேணாம்,நீ ஒன்னும் சொல்ல வேணாம்,இப்பலாம் நான் சொல்றத நீ எங்க கேக்குற,பேசாத,இனிமே என்கிட்ட தயவுசெய்து பேசாத”,என சட்டென்று ஓவர்கரெண்ட் ஆகி எறிந்துபோன பியூஸ்போல் முகத்தை வைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். என்னிடம் மட்டும் இப்படி கோபித்திருந்தால் பளாரென்று ஒரு அறை விட்டிருப்பேன்.சில நிமிடங்களில் அழைப்பு வருவதும்,துண்டிப்பதுமாக இருந்தவள் பிறகு பிகு பண்ணிக்கொண்டே பேசத்தொடங்கினாள்.

“போ புஜ்ஜிம்மா,நான் சொல்றதத்தான் நீ கேக்கனும்.

அவன்?புஜ்ஜிம்மா?புல்டோசர் மாதிரி இருப்பான்! இந்த கொடுமையெல்லாம் பார்க்கும்போது நான் ஏன் மொட்டைமாடியில் வத்தல்போல் காய்ந்து சுஜியின் காதலை வேடிக்கை பார்க்கவேண்டும்? இதற்கு அப்பா அம்மா சொன்னவனையே கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம், அட்லீஸ்ட், மொக்கையாவது போடலாம் எனத் தோன்றியது.செருப்பு அணியாத கால்களில் குதிகாலுக்கும் விரல்களுக்கும் ஏறிய சூடு உரைக்கவில்லை. எப்படியிருப்பான்?இன்னேரம் என்ன செய்து கொண்டிருப்பான்?

டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக்………

சனிக்கிழமை சாயந்திரம் வியாதியில்கூட சிக்கியிருக்கலாம்…ச்ச்ச்சீ!

எந்த குதிரையில் வருவான்?எப்போது வருவானோ தேடுகிறேன்…….

அப்படியே குதிரைய மடக்கி அவனத் தள்ளிவிட்டுட்டு ஓடிரனும்!

இது அந்த காலம்-முன் பனிக்காலம்-(1)